வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்கு உரிமை மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு மசோதாவை வரவேற்கிறோம்

Wednesday, September 1st, 2010

வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வழிவகை செய்யும் மசோதாவையும் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் கே. எம். ஷரீஃப் கூறியுள்ளார். இந்த மசோதா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது. வெளிநாட்டில் இருக்கும்போது வாக்களிக்க இந்த மசோதா வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் மாண்புமிகு சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்கள், கூடிய விரைவில் வெளிநாட்டிலிருந்தபடி இன்டர்நெட் மூலம் வாக்களிக்கும் வழிமுறையை அரசாங்கம் கருதிவருவது என்று கூறியது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம். சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகளில் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் துணிச்சலான முடிவு . இது சமூக நீதியையும் அனைத்து சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் தகவல் களஞ்சியமாக இருக்கும். இது முழுமையாக வெற்றி பெறவும் சாதி கணக்கெடுப்பை உரிய முறையில் சரியாக பயன்படுத்தவும் இதனை 2011 வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புடன் சேர்த்து எடுக்குமாறும் மேலும் பயோமெட்ரிக்குடன் சேர்க்க வேண்டாம் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

AttachmentSize
NationalPressRelease September 1 (Serial no NPR 1)675.77 KB

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India