School Chalo 2012

வாக்கு வங்கி அரசியலை எதிர்ப்போம் சக்தி பெறுவதற்காக வாக்களிப்போம்

Wednesday, January 25th, 2012
National General Assembly

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு கூட்டம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள மலபார் இல்லத்தில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய இருதினங்களுக்கு நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலும் இன்னும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் சமூக அரசியல் நிலைமை பற்றி விரிவான கருத்து பரிமாற்றமும், நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தலித் சமூகத்தவருக்காகவும் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டு அவர்களுடைய வாக்குகளை மற்றும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தி ஆட்சியை பிடித்திருக்கும் இவர்கள் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் தோல்வியையே சந்தித்துள்ளன. பாரம்பரிய கட்சிகள் பின்பற்றும் அதே வழிமுறையைத்தான் இவர்களும் பின்பற்றி வருகிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உண்மையான அதுவும் வீரியமான அரசியல் சக்தி உருவெடுப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
உத்திரபிரதேசத்தை ஆண்டு வந்த பகுஜன் சமாஜ் பார்ட்டி இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தலித் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்று கூறிவிட்டு தலித்களுக்கு எதிராகவும், இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. காவல்துறையினர் மூலமாகவும், உளவுத்துறையினர் மூலமாகவும் பதட்டத்தை ஏற்படுத்துவதிலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதிலும் மற்ற கட்சிகளை காட்டிலும் தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் கடுமையான போக்கினை மாயாவதி அரசு மேற்கொண்டு வருகிறது.


புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ மற்றும் அதனோடு ஒத்த கருத்துடைய இன்ன பிற கட்சிகளால் மட்டுமே வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை போன்றவற்ற களைய முடியும். மேலும் முஸ்லிம் சமூகம் சிக்கித்தவிக்கும் பிரச்சனைகளான‌ பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெற்றுத்தர இயலும் என இப்பொதுக்குழு கருதுகிறது. எனவே உத்திரபிரதேச மக்கள் வாக்கு வங்கியாக செயல்பட்டு இதனால் வரை அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் மக்களுக்காக போராடக்கூடிய எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


இந்திய அரசு இஸ்ரேலுடனான நட்புரவை வளர்த்து வருவது இந்திய நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
பாதுகாப்பு, உளவுத்துறை, விவசாயாம் போன்றவற்றிற்காக இஸ்ரேலிடம் இருந்தும் பொருட்கள் வாங்குவதில் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் இஸ்ரெலுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளராக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் உள்நாட்டு பாதுகாப்பிற்காக இஸ்ரேலையே நாடுவது வேடிக்கையாக இருக்கிறது. என்று இஸ்ரேலுடனான தொடர்பு ஏற்பட்டதோ அன்றிலிருந்து தான் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தை பெங்களூரில் ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தானது. இதனால் யூத பயங்கரவாதம் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு உடனே இஸ்ரேலுடனான எல்லா உடன்படிக்கைகளையும் உடனே ரத்து செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சமீபத்தில் மத்திய அரசு முஸ்லிம்களுக்காக 4.5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இருந்த போதிலும் இதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உடனே அக்குறைகளை சரிசெய்ய முன்வரவேண்டும். மத்திய அரசு வழங்க இருக்கின்ற இந்த 4.5% இடஒதுக்கீட்டில் அனைத்து முஸ்லிம்களையும் அடக்கிவிட முடியாது. மேலும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய 6% இடஒதுக்கீட்டிலும் பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு தேர்தலை முன்வைத்து மீண்டும் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இது போன்ற வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. முஸ்லிம்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி வாக்குகளை பெறுவதினால் அரசியல் எழுச்சி பெறுவதிலிருந்து அவர்களை ஒரு போதும் தடுத்துவிட முடியாது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரிடத்தில் ஒத்த கருத்து இருப்பதாக தெரியவில்லை. புதுடெல்லி காவல்துறை அதிகாரிகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலி எண்கவுண்டர் மூலம் பாட்லா ஹவுஸில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும் என்ற அக்கறை இருந்ததாக தெரியவில்லை. மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிடவேண்டும் அதே சமயம் இக்குற்றத்தை செய்த காவல்துறையினருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


முஸ்லிம்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேசவிரோத சக்திகளை உடனே தடுத்து நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேரள அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் "லவ் ஜிஹாத்" என்ற செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்களை மயக்கி இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதாகவும் எந்த ஒரு ஆதாரமுமில்லாத பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். லவ் ஜிஹாத் என்பதே இந்துத்துவ வெறியர்களால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான விஷயமாகும் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று. இதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற துவேஷ எண்ணத்திலேயே இத்தகையை பொய் பிரச்சாரங்களை இந்துத்துவ வெறியர்கள் பரப்பி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பிஜாபூரில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றியதற்காக காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இத்தகைய தேச விரோத‌ செயல்களை ஆர்.எஸ்.எஸ்தான் செய்து வருகிறது என்பதை பல முறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்து வருகிறது. தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமையில் இப்பொதுக்குழு நடைபெற்றது. தேசிய தலைவர் உரையாற்றும்போது சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுடெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வட இந்தியாவிலிருந்து பங்கேற்றனர். அவர்களுடைய வேகத்தையும் தாக்கத்தையும் உணர்ந்த போது தங்களுக்காக போராட ஒரு இயக்கம் வராதா? என்ற அவர்களுடைய கனவு நனவாகியதாகவே உணர்ந்துள்ளனர். இதனை நாம சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் எண்ணற்ற இடங்களில் நாம் கால் பதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார். அதில் கடந்த காலங்களில் இந்தியா முழுவதிலும் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலத்தலைவர்களான கரமணா அஷ்ரஃப் மெளலவி (கேரளா), முஹம்மது இலியாஸ் தும்பே (கர்நாடகா), ஏ.எஸ். இஸ்மாயில் (தமிழ் நாடு), முஹம்மது ஆரிஃப் அஹமது (ஆந்திரா), முஹம்மது கலீமுல்லாஹ் சித்தீகி (டெல்லி), முஹம்மது ஷாஃபி (ராஜஸ்தான்), முஹம்மது ஷஹாபுதீன் (மேற்கு வங்காளம்), முஃப்தி அர்ஷத் காசிமி (மணிப்பூர்) ஆகியோர் தலைமை தாங்க கல்ந்துரையாடல் நடைபெற்றது.


பொதுக்குழுவின் இரண்டாம் நாள் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் மூலம் சமூக பணியை விளக்கி கூறினார். சமூக நீதி மாநாட்டிற்கான வீடியோ புகைப்படக் காட்சி பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இறுதியாக தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா உரை நிகழ்த்தியதோடு இப்பொதுக்குழு நிறைவுபெற்றது.

AttachmentSize
NGA Press Release Tamil 25.01.2012 (1).pdf60.96 KB

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India