பாஜகவினர் கிரீன்வேலி முற்றுகை முயற்சி தோல்வி

Thursday, August 26th, 2010
மலப்புரம் Aug 26: கேரளாவில் உள்ள கிரீன் வேலி இஸ்லாமிய கல்விக்கூடம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல் துறை தடை விதித்திருந்தது .
மஞ்சேரி பொது மருத்துவமனை அருகில் அவர்கள் ஒன்று கூடும் போது காவல்துறை தடுத்து நிறுத்தியது
தலைவர்கள் சிறிதுநேரம் பேசிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்
முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கிரீன் வேலி பாப்புலர் பிரண்டின் பயிற்சிக்கூடம் என்று குற்றம் சாட்டியிருந்தார் அதனை முற்றுகையிடவும் தீர்மானிக்க பட்டிருந்தது
அதன்படி நேற்று முற்றுகையிட முயன்றபோது மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சேதுராமன் தடுத்து நிறுத்தினார்

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India