நெல்லையில் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக போலிஸ் தடியடி – கைது நடவடிக்கை

Thursday, June 24th, 2010

நெல்லை ஜங்ஷனில் அப்துல் ஹமீது என்பவர் 8 வருடங்களுக்கு மேலாக புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு பின்புறமாக போஸ்பாண்டியன் என்பவர் கடை வைத்து இருகிறார். இவர் அந்த ஏரியாவில் பல கடைகளை நடத்தி வருபவர். இவர் கடையின் பின்புறமுள்ள அப்துல் ஹமீது கடையை விலைக்கு கேட்டுள்ளார். இவர் தரவில்லை என்பதால் பல பிரச்சனைகளை கொடுத்து வந்துள்ளார். இறுதியாக குண்டர்களை வைத்து மிரட்டியும் உள்ளார்.

இந்நிலையில் அப்துல் ஹமீதுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க அவர் இடத்திலுள்ள 4 அடி நிலம் தனக்கு சொந்தம் என்று கூறி போஸ்பாண்டியன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் 2004 முதல் அப்துல் ஹமீது கடையை நடத்த விடாமல் பிரச்சனைகளை கொடுத்துள்ளார். கடையை திறக்க கூட விடவில்லை.

இந்நிலையில் வழக்கு அப்துல் ஹமீதுக்கு சாதகமாக முடிந்தது. அதனால் கடந்த ஜூன் 22ம்தேதி கடையை சுத்தம் செய்ய சென்ற அப்துல் ஹமீது மற்றும் அவரது உதவியாளர்கள் மீது போஸ்பாண்டியன் கூலிப்படையினர் கல்வீசித்தாக்கியுள்ளார்கள். இதையறிந்த கமிஷனர் அவிநாஸ்குமார் போஸ்பாண்டியனை கைது செய்யாமல் தடியடி நடத்தி அப்துல்ஹமீது உட்பட பலரை கைது செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து RDO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னர் பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோர்டு ஆர்டரை காண்பித்தனர். அதனை பார்த்த கலெக்டர் அப்துல் ஹமீதுடைய கடையை திறக்கவும், அதற்க்கு பாதுகாப்பு கொடுக்கவும் கமிஷனருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இன்று 26-6-2010 காலை போலிஸ் கமிஷனர் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது.

இருப்பினும் மொத்த பிரச்சனைக்கும் காரணமாக இருந்த போஸ்பாண்டியன் கைது செய்யப்படவில்லை. மேலும் போலிஸ் சம்பவத்தன்று பிரச்சனை செய்தவரை கைது செய்யாமல் தடியடி நடத்தி அப்துல் ஹமீது மற்றும் அவரது உதவியாட்களை கைது செய்தது. போஸ்பாண்டியன் கைது செய்யவலியுறுத்தியும் போலிஸ் தடியடியை கண்டித்தும் இன்று மாலை 4 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் அஹமது பக்ருதீன் தலைமையில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

 

 


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India