ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு பாராட்டு

ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு நடைபெற்ற பாராட்டு மற்றும் இப்தார் நிகழ்ச்சியில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் பங்கேற்பு
Tuesday, August 31st, 2010

His Excellency Governor of Jharkand felicitated by Popular Front President at an Iftar Progaram held at Chennai

Chief Justice M Yusuf Eqbal, Popular Front TN State President and Kaviko Dr Abdul Rahman with Jharkand Governor

சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் அறக்கட்டளைகள்  கல்வி நிறுவனங்கள் சார்பாக SEED சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது .

 

 

இந்நிகழ்ச்சியில் ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் . வக்ப் வாரிய தலைவர் ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் மேனேஜிங் டிரஸ்டி ஜனாப் எம் ஹிதயதுல்லா அவர்கள் வரவேற்புரை யாற்றினார்கள் .

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள் .
 Chief Justice of Madras High court M.Yusuf Eqbal Felicitated by Popular front TN State president Mohamed Ali Jinna at an Iftar program held at Chennai

Chief Justice of Madras High court MYusuf Eqbal Felicitated by Popular front TN State president Mohamed Ali Jinna


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India