School Chalo 2012

சல்மான் குர்ஷித் மீதான தேர்தல் கமிசனின் நடவடிக்கை தேவையற்றது நரேந்திர மோடி தான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேண்டியவர்

Wednesday, February 15th, 2012

காங்கிரஸ் கட்சி சார்பாக உத்திர பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய சட்ட அமைச்சரும் சிறுபான்மையினர் விவகார அமைச்சருமான சல்மான் குர்ஷித் அவர்கள் பேசிய போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வாக்குறுதியை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மதரீதியானது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியது. மதரீதியாக பகுப்பாய்வு செய்து (Positive communal discrimination) சமநீதியை சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதையும், மதரீதியாக பிரித்து அழிவுக்காக பயன்படுத்துவதையும் ஒப்பிட்டு எதிர்கட்சிகள் அமளியை ஏற்படுத்தியது

இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சல்மான் குர்ஷித் அவர்களின் பேச்சு தேர்தல் கமிசனின் விதிகளை மீறுவதாகவும் இச்செயலை முறையற்றது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு உடனடியாக இவ்விசயத்தில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டது.

இது குறித்து பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியாவின் பொது செயலாளர் கே எம் ஷெரிப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கமிசனின் இந்த கடிதம் தேவையற்றது நியாயமற்றது என்றும் சல்மான் குர்ஷிதை விட நரேந்திர மோடி மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளிவிடுவது என்பது பொதுவான நடைமுறையாக எல்லா அரசியல் கட்சிகளாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற அரசியல் கட்சிகளை மற்றும் பல்வேறு தலைவர்களை பின்பற்றிதான் சல்மான் குர்ஷித் அவர்களும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார் எனவே இதனை முறையற்றது சட்டவிரோதமானது என்று கூற முடியாது .

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விசயத்தில் இத்தகைய விழிப்போடும கண்காணிப்போடும இருக்கும் தேர்தல் கமிசன், அத்வானி உட்பட பல பாஜக தலைவர்கள் தேர்தலின்போது வழங்கும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்கிற மக்களை மதரீதியாக பிரித்து வைக்கும் தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

தேர்தல் காலத்தில் ஏற்படும் விவகாரங்கள் செய்யப்படும் பிரசாரம் பேச்சுக்கள் அறிக்கைகள் குறித்து நியாயமாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிசனை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குஜராத்தில் 2002 கலவரத்தின்போது மத வழிபாட்டு தளங்களை பாதுகாக்க தவறியதற்கு மோடியின் குஜராத் அரசாங்கம் தான் காரணம் என்று குற்றம் சுமத்திய குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில், ஜனாதிபதி உடனடியாக தண்டிக்க வேண்டியது நரேந்திர மோடிதான் என்றும் அவரை உடனடியாக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சேதமடைந்த மத வழிபட்டு தளங்களை சரிசெய்யவேண்டும் அல்லது முழுவதுமாக கட்டிக்கொடுக்க வேண்டும், தேவையான நிவாரண தொகை வழங்கவேண்டும், அதனை நடைமுறைபடுத்தி நிறைவேற்றும் பொறுப்பு இருபத்தியாறு மாவட்ட நீதிபதிகளை சாரும் என்ற நீதிமன்ற உத்தரவை அறிவுறுத்தலை அவர் மனதார வரவேற்றார் .


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India