School Chalo 2012

ஆந்திர பிரதேஷ் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

Monday, February 13th, 2012
ஹைதராபாத் : பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியா "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் " என்ற முழக்கத்துடன் தேசிய பிரசாரத்தை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது . ஆந்திர மாநிலத்தில் இந்த வருடமும் பிப்ரவரி பத்து முதல் இருபது வரை பத்து நாட்கள் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது . மக்களிடையே சுகாதாரம் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வையும் உடற்பயிற்சி குறித்து ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்சிகள் நடைபெறுகிறது என ஆந்திர மாநில தலைவர் ஆரிப் முஹமது கூறியுள்ளார்
மாநில பொது செயலாளர் ஹபிபுல்லாஹ் அவர்கள் , இந்த பத்து நாள் விழிப்புணர்வு பிரசாரத்தின்போது இலவச மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், மாரத்தான் தொடரோட்டம், ஆரோக்கிய விழிப்புணர்வு பொது நிகழ்சிகள் உடற்பயிற்சி வகுப்புகள் ஆகியவை நாடைபெரும் ,உடற்பயிற்சி வகுப்புகளில் குறிப்பாக யோகா தற்காப்பு கலைகள் போன்றவை செய்து காட்டப்படும் அதேபோல விளையாட்டுப் போட்டிகள் தினந்தோறும் நடைபெறும். பிரசாரத்தின் இறுதியில் பிப்ரவரி 19 அன்று "சுகாதார நாள்" என்ற பொது நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு அன்று பொதுமக்களிடையே சுகாதாரம் மற்றும் சுத்தம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலைகள் தெருக்கள் மருத்துவமனைகள் பள்ளி கல்லூரிகள் போன்ற பொது இடங்கள் சுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்

சுவர் விளம்பரங்கள் மாநிலம் முழுவதும் செய்யப்படுகிறது . வலிமையான தேசத்தை உருவாக்கும் தேச கட்டமைப்பில் மக்களின் பங்கு குறிப்பாக இளைஞர்களின் உடல் நலன் அவசியம் என்பதை வலியுறுத்தி இப்பிரச்சாரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இதே போன்றதொரு பிரச்சாரம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது

 


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India